தடுப்பூசி போட மக்களை கட்டாயப்படுத்த மாட்டோம்- இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், அங்கு டிசம்பர் 2 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Update: 2020-11-24 17:55 GMT
லண்டன்,

கொரோனா தடுப்பூசி போட மக்களை கட்டாயப்படுத்த மாட்டோம் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார். போரிஸ் ஜான்சன் மேலும் கூறுகையில்,  அடுத்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகைக்குள் நாட்டில் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்துவிடும் என்றும், ஈஸ்டர் பண்டிகையின் போது மக்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள் என நம்புவதாக போரிஸ் ஜான்சன்  தெரிவித்தார்.

 இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் ஆனது என்றும் பரவல் குறைந்தவுடன் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கை முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.   

மேலும் செய்திகள்