அமெரிக்காவிலும் பரவிய புதிய வகை கொரோனா: கொலராடாவில் முதல் பாதிப்பு உறுதி

அமெரிக்காவின் கொலராடாவில் முதலாவதாக ஒரு நபருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-12-30 02:58 GMT
கோப்புப்படம்
வாஷிங்டன், 

உலகம் முழுவதும் கொரோனாவில் 2-வது அலை பரவ தொடங்கி உள்ளது. உலக அளவில் இதுவரை 8.23 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் தற்போது 1,19,77,704 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே இங்கிலாந்தில் புதிய வகை கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவிலும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.  

இந்நிலையில் அமெரிக்காவில் புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலராடாவில் முதலாவதாக 20 வயதுடைய ஒரு நபருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரது பயணவிவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக கொலராடோ மாநில ஆய்வகம் புதிய வகை வைரஸ் மாறுபாட்டை அந்த நபருக்கு உறுதிப்படுத்தியதுடன், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இங்கிலாந்தின் புதிய வகை வைரஸ் மாறுபாடு (SARS-CoV-2), ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட கொரோனாவின் பரவலை விட வேகமாக பரவக்கூடியது என்று கொலராடோ சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்