அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி சபை சபாநாயகராக நான்சி பெலோசி மீண்டும் தேர்வு

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி சபையின் சபாநாயகராக நான்சி பெலோசி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

Update: 2021-01-04 01:20 GMT
வாஷிங்டன்,

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி சபையின் சபாநாயகருக்கான ஓட்டெடுப்பு நடைபெற்றது.  இதில், ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி மீண்டும் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  அவருக்கு வயது 80.

இந்த ஓட்டெடுப்பில் பெலோசிக்கு 216 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்து உள்ளது.  இதேபோன்று அவையின் சிறுபான்மை தலைவர் கெவின் மேக்கார்த்தி 209 ஓட்டுகளை பெற்றுள்ளார்.  செனட் உறுப்பினர் டேம்மி டக்வொர்த் ஓர் ஓட்டும், பிரதிநிதி சபையின் ஹகீம் ஜெப்ரீஸ் ஓர் ஓட்டும் பெற்றுள்ளனர்.

பெலோசிக்கு எதிராக ஜனநாயக கட்சியின் 5 உறுப்பினர்கள் வாக்களித்து உள்ளனர்.  கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை சபாநாயகராக பதவி வகித்த அனுபவம் பெற்றவர் பெலோசி.  கடந்த 2019ம் ஆண்டில் இருந்து அவையின் சபாநாயகராக இருந்து வருகிறார்.

ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களில் சிலர், 2 முறைக்கு மேல் சபாநாயகராக பதவி வகிக்க கூடாது என பெலோசிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதற்கு பெலோசி, இந்த பதவியை வகிப்பது இதுவே கடைசியாக இருக்கும் என கூறினார்.

மேலும் செய்திகள்