அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் லாரி கிங் மறைவு

அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் லாரி கிங் காலமானார்.

Update: 2021-01-24 00:54 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவின் பழம்பெரும் தொலைக்காட்சி  தொகுப்பாளர் லாரி கிங்  உயிரிழந்தார். கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் அவரது உயிர்  பிரிந்தது. அவருக்கு வயது 87.

1950   மற்றும் 1960- களில் வானொலி தொகுப்பாளராக இருந்த லாரி கிங். பிறகு தொலைக்காட்சி தொகுப்பாளராக புகபெற்று விளங்கினார். எம்மி, பிபாடி, உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்

மேலும் செய்திகள்