தென் ஆப்பிரிக்காவில் 15 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,13,959 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-03-02 23:06 GMT
கேப் டவுன்,

உலக அளவில் கொரோனா பாதிப்பில் தென் ஆப்பிரிக்கா தற்போது 16-வது இடத்தில் உள்ளது. தற்போது அங்கு தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து பொதுமக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தும் பணியை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 

இருப்பினும் தென் ஆப்ரிக்காவில் தற்போது உருமாறிய கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 15,13,959 ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா தொற்று பாதிப்பால் அங்கு இதுவரை 50 ஆயிரத்து 077 பேர் உயிரிழந்துள்ளனர். தென் ஆப்ரிக்காவில் இதுவரை 14.31 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்