உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14.26- கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14.26 கோடியை தாண்டியுள்ளது.

Update: 2021-04-20 01:05 GMT
ஜெனிவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை தொடர்ந்து உலுக்கி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தீவிரமாக போடப்பட்டு வருகிறது.  

எனினும், கொரோனாவின் உக்கிர தாண்டவமும் கட்டுக்கடங்கவில்லை.  உலக அளவில் கொரோனா பல கட்ட அலைகளை அடுத்து அடுத்து தாக்கி திணறடித்து வருகிறது. 

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 142,686,182- ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30,42,839- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 12, 11,87,548- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்று பாதிப்புடன் 18,455,795- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் செய்திகள்