அமீரகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது

புதிதாக நேற்று 1,903 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதால், அமீரகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.

Update: 2021-04-20 16:08 GMT

இதுகுறித்து அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

5 லட்சத்தை கடந்தது

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 238 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் 1,903 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 860 ஆக அதிகரித்தது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,854 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 180 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி போட வேண்டும்

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,559 ஆக உயர்ந்துள்ளது.தற்போது 16 ஆயிரத்து 121 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க முறையான பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அனைவரும் கொரோனா தடுப்பூசியை தன்னார்வத்துடன் வந்து போட்டுக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்