அமெரிக்காவின் நியூயார்க்கில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, இருவர் காயம்

அமெரிக்காவில் அடுத்தடுத்து அரங்கேறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அந்த நாட்டை அதிர வைத்து வருகின்றன.

Update: 2021-04-21 00:54 GMT
நியூயார்க், 

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து காணப்படுகிறது.  பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன. துப்பாக்கி வினியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

ஆனாலும் அரசு தரப்பில் இதுவரை எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் அடுத்தடுத்து அரங்கேறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அந்த நாட்டை அதிர வைத்து வருகின்றன.

இந்த நிலையில், நியூயார்க் நகரில் உள்ள மேற்கு ஹெம்ஸ்டேட் என்ற பகுதியில் மளிகை கடை ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும்  இருவர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்த நஸ்ஸாவ் மாகாண போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையே, துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த இருவரது உடல் நிலையும் சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்