இந்தியாவின் கொரோனா நெருக்கடிக்கு தடுப்பூசி மட்டுமே நீண்ட கால தீர்வு: அமெரிக்கா சுகாதார நிபுணர்

இந்தியாவின் கொரோனா நெருக்கடிக்கு தடுப்பூசி மட்டுமே நீண்ட கால தீர்வு என்று அமெரிக்காவின் உயர் சுகாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-10 04:58 GMT
வாஷிங்டன்,

 இந்தியாவில்  கடந்த இரண்டு மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் அதிகரித்து, முதல் அலையை காட்டிலும் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. 

கொரோனா முதல் அலைக்குப் பிறகு மக்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டியதே இரண்டாம் அலை தீவிரமடைந்திருப்பதற்கு காரணம் என்று நிபுணா்கள் நம்புகின்றனா். அதே நேரம், புதிய உருமாறிய கொரோனா மற்றும் புதிய வகை கொரோனா தாக்கமே இரண்டாம் அலை தீவிரமடைந்திருப்பதற்கு காரணம் என்று வேறு சிலா் கருத்து தெரிவிக்கின்றனா்.

இதற்கிடையே, 'கொரோனா மூன்றாவது அலை தாக்கத்தக்கத்துக்கு வாய்ப்புள்ளது எனவும், அந்தப் புதிய தாக்குதலை எதிா்கொள்ள நாம் தயாராக வேண்டும்' என்று முதன்மை அறிவியல் ஆலோசகா் கே.விஜய்ராகவன் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தாா்.

இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா நெருக்கடிக்கு நீண்ட கால தீர்வாக தடுப்பூசி  மட்டுமே இருக்க முடியும் என்று அமெரிக்காவின் உயர் சுகாதார நிபுணர் அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார். அதேபோல், சீனா செய்தது போல் இந்தியாவும் உடனடியாக தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பது அவசியம் என்றும் பவுசி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்