நைஜீரியா: ஏப்ரல் மாதம் கடத்தப்பட்ட 14 மாணவிகளை விடுதலை செய்த பயங்கரவாதிகள்

நைஜீரியாவில் ஏப்ரல் மாதம் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் 14 மாணவிகளை கடத்திச்சென்றுள்ளனர்.

Update: 2021-05-30 00:50 GMT
அபுஜா,

நைஜீரியாவில் அல்கொய்தா, ஐ.எஸ்,  பண்டிட்ஸ், போகோ ஹராம் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், பயங்கரவாதிகள் அவ்வப்போது கல்லூரிகள், பள்ளிக்கூடங்களுக்குள் நுழைந்து அங்கு கல்வி பயின்று வரும் மாணவ\மாணவிகளை கடத்தி சென்று அவர்களை பயங்கரவாத செயல்களுக்கும், பிணைகைதிகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு பகுதியின் சடுனா மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்குள் கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி ஆயுதங்களுடன் நுழைய்ந்த பயங்கரவாதிகள் அங்கு விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் 14 பேரை கடத்திச்சென்றுள்ளனர்.

கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தை உள்பட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. அதன் பயணாக ஒரு மாதம் கழித்து கடத்தப்பட்ட மாணவிகள் 14 பேரையும் பயங்கரவாதிகள் நேற்று விடுதலை செய்தனர். மாணவிகள் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களது பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்