விமான பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி பற்களை உடைத்த பெண் பயணி - வீடியோ

வாஷிங்டன் போஸ்ட்டின் தகவல்படி தாக்குதலில் இரண்டு பற்களை இழந்த விமான பணிப்பெண் முகத்தில் காயம் ஏற்பட்டு உள்ளது.;

Update:2021-06-04 12:57 IST
வாஷிங்டன்

தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானம்  ஒன்று சாக்ரமென்டோவில் இருந்து சான் டியாகோ சர்வதேச விமான நிலையம் சென்றது விமானம்  தரையிறங்க தயாரானது. விமான பெண் உதவியாளர் பயணிகளிடம் விமானம்  தரையிறங்குவதற்கு தயாராகி வருவதால்  பயணிகள் தங்கள் சீட் பெல்டை அணிந்து கொள்ளுமாறு கூறினார். 

அப்போது 28 வயதான விவியன்னா குயினோனெஸ் என்ற பெண் விமானப் பணிப்பேண்ணின் முகத்தில் குத்தி உள்ளார்.மற்றொரு பயணி விமானப் பணிப்பெண்ணைத் தாக்குவதைத் தடுக்க முயன்றார், ஆனால் அந்தப் பெண் அவரை உட்காரு என மிரட்டி உள்ளார்.   மிகவும் கடினமாக குத்தியதால் விமான பணிப்பெண் இரண்டு பற்களை இழந்தார்.

இதனை அருகில் இருந்த மற்றொரு பயணி வீடியோ எடுத்துள்ளார்.வாஷிங்டன் போஸ்ட்டின் தகவல்படி தாக்குதலில் இரண்டு பற்களை இழந்த விமான பணிப்பெண் முகத்தில் காயம் ஏற்பட்டு உள்ளது.

விமானம் சான் டியாகோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் குயினோனெஸை போலீசார் விமானத்திலிருந்து வெளியேற்றினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார் என்று சான் டியாகோ விமான நிலைய  போலீசார்  ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்