சோமாலியாவில் பலத்த மழைக்கு 4 லட்சம் பேர் பாதிப்பு: ஐ.நா. அமைப்பு

சோமாலியா நாட்டில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என ஐ.நா. மனிதநேய அமைப்பு தெரிவித்துள்ளது.

Update: 2021-06-04 16:44 GMT
மொகதிசு,

ஐ.நா. அமைப்பின் மனிதநேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், சோமாலியா நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் இறுதியில் இருந்து பெய்த பலத்த மழையால் 14 மாவட்டங்களை சேர்ந்த 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

அவர்களில் 1 லட்சத்து ஓராயிரத்து 300 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடத்தில் தங்கியுள்ளனர்.  சோமாலியாவின் ஷாபெல் மண்டல மக்கள் அதிக அளவில் பாதிப்படைந்து உள்ளனர்.

இதில், ஜோஹர் மாவட்டத்தில் 27 கிராமங்களை சேர்ந்த 66 ஆயிரம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர்.  வெள்ளத்திற்கு 40 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் முற்றிலும் அழிந்து விட்டன.  11 பள்ளி கூடங்களில் கற்பித்தல் தடைப்பட்டு உள்ளது.

இதேபோன்று பெலெட்வெய்ன் நகரில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு அஞ்சி 22 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர்.  1,235 ஹெக்டேர் விவசாய நிலங்கள் அழிந்து விட்டன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்