நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை - உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா அறிக்கை

நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா அறிக்கை சமர்பித்துள்ளது.

Update: 2021-06-22 22:37 GMT
கோப்புப்படம்
சியோல்,

சர்வதேச நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வடகொரியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் எச்சரித்திருந்தார். 

இந்நிலையில் வடகொரியா, தங்கள் நாட்டில் கடந்த 10-ந் தேதி வரை 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

மேலும் செய்திகள்