சீனாவில் கொரோனா பரவல் எதிரொலி: ஷென்சென் நகரில் இருந்து பெய்ஜிங் செல்லும் விமானங்கள் ரத்து

கொரோனா பரவுவதை தடுக்க சீனாவின் ஷென்சென் நகரில் இருந்து தலைநகர் பெய்ஜிங்கிற்கு வரும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Update: 2021-06-25 00:30 GMT
பெய்ஜிங்,

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. சீனாவின் அதிக மக்கள் தொகையை கொண்ட மாகாணங்களில் ஒன்றான காங்டாங் மாகாணத்தில், கடந்த ஒரு மாதத்தில் புதிதாக 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் அந்த மாகாணத்தில் உள்ள ஷென்சென் நகரில் இருந்து தலைநகர் பெய்ஜிங்கிற்கு நேரடியாக செல்லும் விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பிற பகுதிகளுக்கு விமான சேவை தொடர்கிறது. இந்த தடை ஜூலை 1 வரை தொடர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்