கொரோனா அச்சுறுத்தல்; 16 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதித்தது பஹ்ரைன் அரசு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பஹ்ரைனில் 16 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-14 01:18 GMT
மனாமா,

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. தொற்று பரவல் குறைந்த பின்னர் தடை நீக்கப்பட்டு மீண்டும் போக்குவரத்து தொடங்குகிறது. கொரோனா தொற்று வெவ்வேறு நாடுகளுக்கு பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அந்த வகையில் பஹ்ரைன் நாட்டில், 16 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பஹ்ரைன் விமான போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி துனிசியா, ஈரான், ஈராக், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா, இதோனேசியா உள்ளிட்ட 16 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே பஹ்ரைனில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாள் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்