அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு ; 2 வாரங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு ;42 மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது

Update: 2021-08-20 06:17 GMT
Image courtesy : John Moore/Getty Image
வாஷிங்டன்

அமெரிக்காவில்  மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு 1.5 லட்சத்துக்கு மேல் சென்று உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா முதல் அலை பரவலில் கடுமையாக பாதிக்கப்பட்டது அமெரிக்கா தான். அங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். ஆனால் அதன் பின் அமெரிக்கா தடுப்பூசி போட்டு பரவலைக் கட்டுப்படுத்தியது. இந்நிலையில் இப்போது அங்கு உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

கடந்த சில தினங்களாக இந்த பரவல் அதிகமாகியுள்ள நிலையில் இப்போது அங்கு மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக  அச்சம் எழுந்துள்ளது. தினசரி பாதிப்பு அங்கு 1.6 லட்சத்துக்கு மேல் உள்ளதாகவும்.  சில தினங்களாக தினசரி சராசரி   800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

42 மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது, இது டிசம்பர் மாதத்திற்குப் பிறகு மிக கூடுதல் எண்ணிக்கையாகும். கடந்த தன்கிழமை முடிவடைந்த வாரத்தில், அமெரிக்கா 5,742 இறப்புகளைப் பதிவு செய்து உள்ளது.ஆகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில் கொரோனாவால் 10,991 அமெரிக்கர்கள் இறந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்