வனப்பகுதியில் 10 நாட்களாக தொடரும் காட்டுத்தீ - சுமார் 1.17 லட்சம் ஏக்கர் வனப்பகுதி நாசம்

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள எல்டொரோடா வனப்பகுதியில் காட்டுத்தீ 10 நாட்களாக எரிந்து வருகிறது.

Update: 2021-08-25 17:29 GMT
எல்டொரோடா,

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள எல்டொரோடா வனப்பகுதியில் 10 நாட்களாக தொடர்ந்து காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. காட்டுத்தீயால் அப்பகுதி மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். 

தீயினால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை சூழ்ந்து இருப்பதால் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

10 நாட்களாக தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் இதுவரை சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி தீயால் கருகி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்