கலிபோர்னியா: அலிசால் காட்டுத்தீ - 13,400 ஏக்கர் காடுகள் நாசம்

கலிபோர்னியா மாகாணம் அலிசாலில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் 13,400 ஏக்கர் காடுகள் நாசமாகின.

Update: 2021-10-13 09:49 GMT
கலிபோர்னியா,

நேற்று முன்தினம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் அலிசால் நீர்தேக்கத்தின் அருகே  காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீயானது காற்றின் காரணமாக வேகமாகப் பரவியது. இதனால் தெற்கு சாண்டா பார்பரா கவுண்டி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. 

13,400 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகிவிட்டதாக சாண்டா பார்பரா கவுண்டி தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். காட்டுத்தீயின் காரணமாக அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளை நெருங்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

சுமார் 600 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க வனத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்