“அமேசான் காடுகள் அழிப்பு குறித்த ஆய்வுகள் உண்மையானது அல்ல” - போல்சனாரோ மறுப்பு

மரப்பொருட்களுக்கான தேவை அதிகரித்திருப்பதே அமேசான் காடுகள் அழிவிற்கு காரணம் என பிரேசில் அதிபர் போல்சனாரோ கூறியுள்ளார்.

Update: 2021-11-20 23:10 GMT
பிரேசிலியா,

உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசானில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவாக, கடந்த ஆகஸ்ட் 2020 முதல் ஜூலை 2021 வரையிலான ஒரு ஆண்டு காலத்தில் மட்டும் சுமார் 13,235 சதுர கி.மீ. பரபப்பளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக பிரேசில் விண்வெளி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள பிரேசில் நாட்டின் அதிபர் போல்சனாரோ, சர்வதேச அளவில் மரம் மற்றும் மரப்பொருட்களுக்கான தேவை அதிகரித்திருப்பதே அமேசான் காடுகள் அழிவிற்கு காரணம் எனக் கூறியுள்ளார். மேலும் அமேசான் காடுகள் அழிப்பு தொடர்பான ஆய்வு முடிவுகளை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

“ஆய்வு முடிவுகளில் கூறப்படும் அளவிற்கு காடுகள் அழிக்கப்படுவது உண்மையானால் அமேசான் காடுகள் தற்போது பாலைவனமாகி இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதும், காடுகள் எரிக்கப்படுவதும் தான் அமேசான் காடுகள் அழிப்பிற்கு காரணம் என்று தெரிவித்துள்ள அவர், எதிர்கட்சிகள் வேண்டுமென்றே அரசின் மீது திட்டமிட்டு பழிசுமத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்