இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.

Update: 2021-12-05 01:45 GMT
ஜகார்தா, 

இந்தோனேசியாவில் இன்று காலை 5:17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் டோபெலோவிற்கு வடக்கே 259 கிமீ. மையப்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 174.3 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்திற்கு பிறகு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்தோனேசியாவில் நில தட்டுகளின் அசைவு காரனமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

மேலும் செய்திகள்