இந்தோனேசியா: மீண்டும் வெடித்து சாம்பலை வெளியிடும் செமேரு எரிமலை

இந்தோனேசியாவில் உள்ள செமேரு எரிமலை மீண்டும் சாம்பலை வெளியிடுகிறது.

Update: 2021-12-19 20:26 GMT
ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் மிக உயரமான எரிமலையான செமேரு எரிமலை இந்த மாத தொடக்கத்தில் வெடித்து அதிகப்படியான சாம்பலை வெளியிட்டது. இந்த எரிமலை சீற்றத்தால் 46 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் புகுந்தனர். 

இந்த நிலையில் நேற்று திடீரென இரண்டாம் முறையாக மீண்டும் எரிமலை வெடிக்கத்தொடங்கியது. அதிகாலை ஏற்பட்ட இந்த எரிமலை வெடிப்பின் விளைவாக அடர்த்தியான வெள்ளை சாம்பல்கள் வானில் கலந்தன. எரிமலைக்குழம்பு வெளிவர வாய்ப்பு இருப்பதால்,  எரிமலையிலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா, உலகளவில் எரிமலைக்கு அருகில் வாழும் மிகப்பெரிய மக்கள்தொகையை  கொண்ட நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்