நீல நிற பெண் உருவம்.. ‘தினமும் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கும் பெண்’ அமெரிக்காவில் வினோத நிகழ்வு!!

அந்த பெண்மணி வானில் வேற்றுகிரகவாசிகளை கண்டதாக தெரிவித்து பீதியை கிளப்பியுள்ளார்.

Update: 2022-01-29 13:19 GMT
மிசோரி,

அமெரிக்காவை சேர்ந்த லில்லி நோவா என்ற 29 வயதான பெண்மணி, நவம்பர் மாதம் முதன்முறையாக வேற்றுகிரகவாசிகளை கண்டதாகவும், பின்னர் சிறிது நாட்கள் கழித்து மீண்டும் கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வானவியல் குறித்த புகைப்படத் துறையில் ஆர்வம் மிகுந்த அந்த பெண்மணி, லாக்டவுன் காலகட்டத்தின் போது வானில் ஏலியன்களை(வேற்றுகிரகவாசிகள்) கண்டதாக தெரிவித்து பீதியை கிளப்பியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-

“ஏலியன்களில் ஒருவர் ஒரு பெண்ணை போல் இருந்தார். நீல நிற உடம்புடன் முடியில்லாமல் மிக அழகாக, உடம்பை ஒட்டிய சாம்பல் நிற ஆடை அணிந்திருந்தார்.

என் வீட்டின் வெளியே இரவில் காற்று வாங்கிக்கொண்டு உலாவிக் கொண்டிருந்த போது தான் ஏலியன்களை கண்டேன். அப்போது பளிச்சென்ற வெளிச்சம் வீட்டின் வெளியே சிறிது தூரத்தில் மின்னியது.

அதனை தொடர்ந்து கண்காணித்த போது, இரண்டாவதாக முக்கோண வடிவிலான ஒரு விண்கலம் அங்கே வந்தது. பின்னர்  என் கண்ணெதிரே மறைந்து விட்டது.

இந்த நிகழ்வு முதலில் பிரம்மிப்பாக இருந்தாலும், பின்னர் வாடிக்கையாகி விட்டது.

ஏலியன்கள் டெலிபதி முறையில் எனக்கு அவர்களுடைய உருவத்தை எனக்கு அனுப்ப விழைகின்றனர் என்று நான் நம்புகிறேன். நான் அவர்களை கவனிப்பதை அவர்கள் அறிந்திருந்தாலும் கூட, அவர்கள் என்னிடம் தொடர்பு கொள்ள விரும்புவதாக நினைக்கிறேன். மெல்ல மெல்ல அவர்களிடம் நான் தொடர்பை அதிகரித்துக் கொண்டே வருகிறேன்.

இந்த அரிய நிகழ்வின் மூலம், வானவியல் புகைப்பட துறையில் ஆர்வம் இன்னும் அதிகமாகி உள்ளது. இதற்காக நான் ஊட்டச்சத்து நிபுணராக எனது தொழிலை கைவிட்டேன்.தற்போது இந்த விஷயத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறேன்.

ஒருநாள், தியானத்தில் அனுபவம் வாய்ந்த ஒரு நண்பருடன் நான் வெளியே சென்றிருந்தேன். அப்போது நாங்கள் ஏலியன்கள் இப்போது தோன்ற வேண்டும் என்று தியானம் செய்தோம். சிறிது நேரத்தில் நாங்கள் காரை விட்டு வெளியே வந்த போது, தங்க நிறத்திலான ஒரு பிரகாசமான உருண்டை தோன்றி எங்களை சுற்றிக் கொண்டிருந்தது. 

அதை கண்டதும் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவர்களை நான் நிதர்சனமாக நம்பி அழைத்ததால் தோன்றியுள்ளார்கள்” என்று கூறி ஆச்சரியப்பட வைக்கிறார் இந்த அதிசய பெண்மணி.

மேலும் செய்திகள்