மக்களின் எதிர்ப்பை புறக்கணித்த சீனா.. ஊரடங்கை மேலும் நீட்டித்தது

சீனாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது பல மடங்கு வேகமாக பரவி வருகிறது.

Update: 2022-04-29 09:06 GMT
பெய்ஜிங்,

சீனாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது பல மடங்கு வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்த அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஷாங்காய் நகரில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகக் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஷாங்காய் நகரில் வசிக்கும் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 

ஊரடங்குக்கு எதிராக பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.   இந்த நிலையில், தலைநகர் பெய்ஜிங் நகரிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  வணிக வளாகங்கள், சினிமா திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனைகளை முடுக்கிவிடவும் பெய்ஜிங் நகர அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  சீனாவின் நிதி தலைநகரான ஷாங்காய் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாளில் 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்