‘லாங் நைட்’ எனப்படும் நீண்ட இரவு காலத்திற்கு சென்றுவிட்டது அண்டார்டிகா!

அண்டார்டிகாவில் இன்னும் 4 மாதங்களுக்கு அங்கு சூரிய உதயம் இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-05-17 05:42 GMT

உலகில் சில நாடுகளில் சில இடங்களில் மட்டும் சூரியன் அதிக நேரம் மறையாமல் இருக்கும். சில இடங்களில் சூரியன் மறையவே மறையாது.

ஆனால் சற்று வித்தியாசமாக அண்டார்டிகாவில் நான்கு மாதங்களுக்கு சூரிய உதயம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் இன்னும் நான்கு மாதங்களுக்கு சூரிய உதயம் இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லாங் நைட் எனப்படும் நீண்ட இரவு காலத்திற்கு சென்று விட்டது அண்டார்டிகா. இன்னும் 4 மாதங்களுக்கு அங்கு சூரிய உதயம் இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு கடைசி சூரியன் மறைவு மே 13ஆம் தேதி நிகழ்ந்தது. பூமியின் மற்ற பகுதியில் ஒரு நாள் என்பது இரவு பகல் சேர்ந்தது. ஆனால் அண்டார்டிகாவில் இரவு பகல் மாறுவதே சுமார் 6 மாதங்களுக்கு ஒரு முறை தான். இதற்கு காரணம் பூமி தன் அச்சில் 23.5 டிகிரி சாய்ந்து இருப்பதே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்