வடமேற்கு சீனாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள அக்கி மாவட்டத்தில் 5.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-03 03:41 GMT

பெய்ஜிங்,

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள அக்கி மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி காலை 6.02 மணிக்கு (பெய்ஜிங் நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க மையம் (சிஇஎன்சி) தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் 40.88 டிகிரி வடக்கு அட்சரேகையிலும் 78.14 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று அதிகாலை 3.29 மணியளவில் சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்