பூங்காவில் ரோப் காரில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

பூங்காவில் உள்ள ரோப் கார் 40 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்தபோது அதில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-07-30 07:47 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் ஹட்லிங்பெர்க் நகரில் அனக்னீஸ்டா என்ற பொழுதுபோக்கு பூங்கா உள்ளது.

இந்த பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்காக ரோப் கார் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரோப் கார்களில் ஏறி சுற்றுலா பயணிகள் பூங்காவை முழுவதும் சுற்றிபார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த ரோப் காரில் நேற்று ஒரு இளம்பெண் தனியாக பயணித்துள்ளார். ரோப் கார் பூங்காவுக்கு மேலே 40 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்தபோது அந்த இளம்பெண் பாதுகாப்பு கம்பிகளை விலக்கிக்கொண்டு ரோப் காரில் இருந்து கீழே குதித்தார்.

இதில், 40 அடி உயரத்தில் இருந்து கிழே குதித்த அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அந்த பெண் பயணித்த ரோப் காருக்கு பின்னால் வந்த ரோப் காரில் பயணித்தவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பூங்கா நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரோப் காரில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை கைப்பற்றினர். மேலும், தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் யார்? உண்மையிலேயே இது தற்கொலை தானா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்