ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோபாசோவில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் 60 பேர் பலியாயினர்.

Update: 2023-04-24 16:59 GMT

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோபாசோவில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஆயுத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. நாட்டின் 40 சதவீத பகுதிகளை அந்த ஆயுத குழுக்கள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இவர்களை ஒடுக்க அந்த நாட்டு ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.

இந்த நிலையில் புர்கினோபாசோவின் வடக்கு பகுதியில் மாலி நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஓவாஹிகோயா நகரில் இருக்கும் ஒரு கிராமத்துக்குள் முன்தினம் இரவு 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் நுழைந்தனர்.

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் லாரிகளில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் கண்ணில்பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல சுட்டுத்தள்ளினர். இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 60 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் ராணுவ உடையில் இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தை கிராமமக்கள் கூறினா்.

Tags:    

மேலும் செய்திகள்