இம்ரான் கான் குறித்த செய்திகளை ஒலிபரப்ப தடை: ஊடகங்களுக்கு பாக். அரசு அதிரடி கட்டுப்பாடு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குறித்த செய்திகளை ஒலிபரப்ப‌க் கூடாது என, ஊடக‌ங்களுக்கு அரசு எச்சரித்துள்ளது.

Update: 2022-11-06 12:59 GMT

கோப்புப்படம் 

கராச்சி,

தன் மீதான தாக்குதலுக்கு பின்னணியில் ஆட்சியாளர்கள் சிலர் இருப்பதாக இம்ரான் கான் குற்றம் சாட்டியிருப்பதை அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

தவறான தகவல் அளித்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த இம்ரான் கான் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளதோடு, இம்ரான் கான் குறித்த செய்திகளை ஊடகங்களில் ஒலிபரப்பக் கூடாது என்று அனைத்து ஊடகங்களுக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

மீறி ஒலிபரப்பினால், அந்த ஊடகங்களின் உரிம‌ம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்