ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு; 4 பேர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்

குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-27 21:05 GMT

Image Courtesy : AFP

காபுல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாக்சிங் கிளப்பில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பு நடந்த இடம் ஷியைட் பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி என தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக காபூல் நகர காவல்துறையின் தலைமை செய்தி தொடர்பாளர் காலித் சத்ரான் கூறுகையில், குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை எனவும், இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்