திடீர் மின்வெட்டு காரணமாக இருளில் மூழ்கிய பிரேசில்

மின்சார சப்ளை ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.;

Update:2023-08-17 01:53 IST

பிரேசிலியா,

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் மின் உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக நீர் மின்நிலையங்கள் விளங்குகின்றன. நாட்டின் 63 சதவீதம் மின் உற்பத்திக்கு இது வழி வகுக்குகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ரோரைமா தவிர நாட்டின் 25 மாகாணங்களும் இருளில் மூழ்கின.

முக்கிய மின்சார சப்ளை ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிகப்படுகிறது. எனினும் உரிய காரணம் குறித்து நாட்டின் எரிசக்தி இலாகா இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை.

திடீர் மின்தடையால் நாட்டின் பொதுசேவைகள் மற்றும் கல்வி நிலையங்கள் முடங்கின. மேலும் மின்சார ரெயில்கள் இயக்கம் தடைப்பட்டதால் பொதுமக்கள் அவதியுற்றனர். பின்னர் பெரும்பாலான மகாணங்களில் மின்சார வினியோகம் மீட்டெடுக்கப்பட்டது. இயல்புநிலைக்கு திரும்பும் நடவடிக்கையில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்