ஜப்பானில் நிலநடுக்கம்: உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம்

இந்திய நேரப்படி மதியம் 12.40 மணியளவில் ஜப்பானில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2024-01-01 10:10 GMT

image courtesy: PTI

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மதியம் 12.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி பாதிப்பு தொடர்பாக உதவி எண்களை, இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி +81-80-3930-1715, +81-70-1492-0049, +81-80-3214-4734, +81-80-6229-5382, +81-80-3214-4722 என்ற உதவி எண்களிலும், sscons.tokyo@mea.gov.in, offfseco.tokyo@mea.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஜப்பானில் உள்ள இந்தியர்கள் உள்ளூர் அரசின் வழிமுறைகளை பின்பற்றவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்