ஈஸ்டர் தீவில் காட்டுத்தீ - உலகப் புகழ் பெற்ற 'மோவாய் சிலைகள்' சேதம்

வேகமாக பரவிய இந்த காட்டுத்தீயால் மோவாய் சிலைகள் பலத்த சேதமடைந்தன.

Update: 2022-10-08 21:13 GMT

சாண்டியாகோ,

சிலி நாட்டில் பொலினேசியன் என்ற தீவிற்குள் ஈஸ்டர் தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் வித்தியாசமான முக அமைப்பு கொண்ட நூற்றுக்கணக்கான பிரம்மாண்டமான சிலைகள் உள்ளன. உலகப் புகழ் பெற்ற இந்த சிலைகள் மோவாய் சிலைகள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் ஈஸ்டர் தீவில் எதிர்பாராத விதமாக காட்டுத்தீ ஏற்பட்டது. வேகமாக பரவிய இந்த காட்டுத்தீயால் மோவாய் சிலைகள் பலத்த சேதமடைந்தன. இதற்கு சிலி அரசின் அஜாக்கிரதையே காரணம் என ஆய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்