எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ரத்து

உலக பணக்காரரான எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக அறிவித்து இருந்தார்.

Update: 2024-04-20 06:41 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

உலக பணக்காரர்களில் ஒருவரும், 'எக்ஸ்' வலைத்தள நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் வருகிற 22-ந் தேதி இந்தியாவிற்கு வருகை தருவதாக அறிவித்து இருந்தார்.

இந்த வருகையின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்றும், இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டு திட்டங்களை அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்நோக்கி உள்ளதாக எலான் மஸ்க்கும் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் முன்னதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எலான் மஸ்க், தனது எக்ஸ் தளத்தில் "சில தவிர்க்கமுடியாத காரணங்களால் எனது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா வர உள்ளதை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்