ஜாமின் கிடைத்து போலீசை பார்த்த உடன் பதறியடித்து ஓடி கோர்ட்டில் தஞ்சமடைந்த முன்னாள் மந்திரி...!

கோர்ட்டு வளாகத்திற்கு வெளியே முன்னாள் மந்திரியின் கார் சென்ற நிலையில் அங்கு போலீசார் காத்திருந்தனர்.

Update: 2023-05-16 11:55 GMT

லாகூர்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தேசதுரோகம், ஊழல் உள்ளிட்ட வழக்குகளும் அடக்கம்.

இதனிடையே, ஊழல் வழக்கு தொடர்பாக லாகூர் கோர்ட்டில் ஆஜராக வந்த இம்ரான்கானை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டதையடுத்து இம்ரான்கான் விடுதலை வழங்கப்பட்டது. தற்போது இம்ரான்கான் ஜாமினில் உள்ளார்.

இதனிடையே, இம்ரான்கானை போன்றே பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சியின் மூத்த தலைவர்களையும், முன்னாள் மந்திரிகளையும் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்கள் தங்களுக்கு ஜாமின் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த வகையி இம்ரான்கான் கட்சியின் துணைத்தலைவரும், தகவல் தொழில்நுப்டத்துறை முன்னாள் மந்திரியுமான பவாத் சவுதிரி மீது வன்முறையை தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்க பவாத் சவுதிரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இந்து விசாரித்த இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு பவாத் சவுதிரிக்கு முன் ஜாமின் வழங்கியது.

இதனால், அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார். முன் ஜாமின் கிடைத்ததையடுத்து பவாத் சவுதிரி கோர்ட்டில் இருந்து தனது காரில் புறப்பட்டார். அப்போது, கோர்ட்டு வளாகத்திற்கு வெளியே வெறொரு வழக்கில் பவாத் சவுதிரியை கைது செய்ய போலீசார் காத்திருந்தனர்.

தன்னை கைது செய்ய போலீசார் காத்திருப்பதை பார்த்த பவாத் சவுதிரி உடனடியாக தனது காரில் இருந்து இறங்கி கோர்ட்டிற்குள் தப்பியோடினார். பாதுகாப்பு தேடி பவாத் சவுதிரி கோர்ட்டிற்குள் நுழைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



Tags:    

மேலும் செய்திகள்