கடற்கரையில் ஓட ஓட விரட்டி 3 இளம் பெண்கள் கொலை...! ஆபத்தில் உள்ளதாக தகவல் தெரிவித்த சிறிது நேரத்தில் நடந்தது...!
கடந்த ஏப்ரல் 5-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் நாய், கடற்கரை ஓரத்தில் கால்களால் தோண்டத் தொடங்கியது. அங்கு சென்று பார்த்தபோது மூன்று இளம் பெண்களின் உடல்கள் கிடந்து உள்ளன.;
குயினேட்
ஈக்வடாரின் குயினேட் அருகே உள்ள கடற்கரைக்கு கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி டென்னிசி ரெய்னா (19), யூலியானா மாசியஸ் (21), நயேலி டாபியா (22) ஆகிய 3 இளம் பெண்கள் உல்லாச சுற்றுப்பயணம் சென்றனர்.
கடற்கரை ஓரத்தில் விலையாடி கொண்டு இருந்த அந்த மூன்று இளம் பெண்களையும் சில ரவுடிகள் துரத்திச் சென்றனர். இந்நிலையில், பயந்துபோன இளம்பெண்கள், தாங்கள் ஆபத்தில் உள்ளதாக தங்களது நெருங்கிய தோழிகளுக்கு சமூக வலைதளம் மூலம் தகவல் அனுப்பினர்.
நயேலி தனது சகோதரருக்கு இரவு 11:10 மணிக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்பியுள்ளார்.ஆனால் அவரதுஅண்ணன் உடனே போன் செய்தபோது அவளது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
மற்றொரு இளம் பெண் டென்னிஸ், 'எனக்கு ஏதோ நடக்கப் போகிறது... எனக்கு ஏதாவது நேர்ந்தால், ஐ லவ் யூ வெரி மச் என்பதை நினைவில் வையுங்கள்' என தனது காதலனுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் மறுநாள் 3 அழகிகளும் கடற்கரையில் அரை நிர்வாணமாக கொலை செய்யபட்டு கிடந்தனர். அடையாளம் தெரியாத நபர்களால் சித்திரவதை செய்யப்பட்டு, கழுத்தை அறுத்து, மணலில் புதைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த ஏப்ரல் 5-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் நாய், கடற்கரை ஓரத்தில் கால்களால் தோண்டத் தொடங்கியது. அங்கு சென்று பார்த்தபோது மூன்று இளம் பெண்களின் உடல்கள் கிடந்து உள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், இந்தக் கொலைகளை யார் செய்தார்கள் என தெரியவில்லை. அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான நயேலி திருமணமானவர் மற்றும் ஒரு குழந்தையின் தாயாவார். இவர் பிரபல பாடகியும் கூட. யூலியானா மேசியஸ் வேளாண் பொறியியல் மாணவி.
எஸ்மரால்டாஸின் மீன்பிடித் துறைமுகத்தில், இளம் பெண்கள் கொல்லப்பட்ட இடத்திலிருந்து 60 மைல் தொலைவில், போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே நீடித்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இந்த பிரத்யேக வியத்தகு சிசிடிவி காட்சிகள் துப்பாக்கி சூட்டுக்கு பயந்து மக்கள் தங்கள் உயிரை காப்பாற்ற கடலில் குதிப்பதைக் காணலாம்.