பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன் - லாகூர் கோர்ட்டு உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன் வழங்கி லாகூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-04-13 20:13 GMT

கோப்புப்படம்

லாகூர்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் விசாரணைக்கு ஆஜராகாத அவரை கடந்த மாதம் போலீசார் கைது செய்ய முயன்றனர்.

அப்போது இம்ரான்கான் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்த மோதல் தொடர்பாக இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இதில் ஜாமீன் கேட்டு இம்ரான்கான் தாக்கல் செய்த மனுக்களை லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு விசாரித்தது. விசாரணை முடிவில் 3 வழக்குகளில் அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி வரை இம்ரான்கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அத்துடன் வழக்கு விசாரணைக்கு காணொலி மூலம் ஆஜராவதற்கு ஒருமுறை அனுமதியும் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்