3 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஷாங்காய் நகரில் கொரோனா அதிகரிப்பு
ஷாங்காய் நகரில் இன்று 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது;
பெய்ஜிங்,
கொரோனா பாதிப்பு உலக அளவில் சரிந்து வரும் நிலையில், தற்போது சில நாடுகளில் உயரத்தொடங்கியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் முதன் முதலாக பரவிய சீனாவில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
அங்குள்ள ஷாங்காய் நகரில் 3 மாதங்களில் இல்லாத அளவு கொரோனா பரவல் உயர்ந்துள்ளது. இதனால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஷாங்காய் நகரில் இன்று 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஜூலை 13 ஆம் தேதிக்கு பிறகு ஒருநாள் பாதிப்பு அதிகம் இதுவே ஆகும்.