சர்வதேச நிதிய குழு இம்மாதம் இலங்கை வருகை: கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

சர்வதேச நிதிய குழு இம்மாதம் இலங்கை வருகிறது. இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.;

Update:2022-08-19 03:50 IST

Image Courtacy: AFP

கொழும்பு,

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்ைக சிக்கி தவிக்கிறது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியவில்லை. அதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

இலங்கையை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்க சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) கடன் வாங்க இலங்கை அரசு முடிவு செய்தது.

இதுதொடர்பாக இலங்கை நிதி மந்திரியாக இருந்த அலி சாப்ரி, சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்காவுக்கு சென்று சர்வதேச நிதிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சர்வதேச நிதியம், சில நிபந்தனைகளை விதித்தது. அதை நிறைவேற்றும் பணிகளில் இலங்கை அரசு ஈடுபட்டது.

இந்தநிலையில், இலங்கைக்கு சர்வதேச நிதியத்தின் குழு வருகிறது. இத்தகவலை இலங்கை மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்கே தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

சர்வதேச நிதியத்திடம் கடன் பெறும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நிதியத்தின் குழு இம்மாத இறுதியில் இலங்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

அக்குழு, இலங்கை அரசுடன் ஊழியர்கள் மட்டத் திலான ஒப்பந்தம் ெசய்து கொள்ளும். அதன்பிறகு, கடன் கொடுத்த நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்