குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் உடல்நலக்குறைவால் காலமானார்

கடந்த மாதம் உடல்நலப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2023-12-16 12:31 GMT

குவைத்,

குவைத் நாட்டின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபா, தனது 86வது வயதில் காலமானார். இந்த தகவலை அறிக்கை ஒன்றின் மூலம் குவைத் அரசு தெரிவித்துள்ளது. அதில், குவைத் அரசின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடனும், துக்கத்துடனும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

தனது சகோதரர் மறைவுக்கு பின் 2020-ல் மன்னராக பொறுப்பேற்ற அவர், மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளார். கடந்த மாதம் உடல்நலப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல் நலம் முன்னேறியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று காலமானார்.

 

Tags:    

மேலும் செய்திகள்