உலகம் முழுவதும் டுவிட்டர் இணையதளம் முடங்கியது..! பயனர்கள் அவதி
உலகம் முழுவதும் டுவிட்டர் தளம் திடீரென முடங்கியுள்ளது;
Image Courtesy : AFP
வாஷிங்டன்,
பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டர் தளம் உலகம் முழுவதும் திடீரென இன்று முடங்கியுள்ளது. .பயனாளர்கள் டுவிட் செய்யமுடியாமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
செல்போன் மூலமும், கணினி மூலமும் டுவிட் செய்யும்போது வெவ்வேறு காரணங்களை கொண்டு டுவிட் செய்யமுடியாத நிலை உள்ளது.
இன்று மாலை 5.52 மணி இருந்து டுவிட்டர் தளத்தில் பிரவுஸ் செய்தவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.டுவிட்டர் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வராத நிலையில் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர்.