ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஊடுருவியது ' குரங்கு காய்ச்சல்'
ஐரோப்பிய நாடுகளில் பலருக்கும் கண்டறியப்பட்ட இந்த நோய் பாதிப்பு, ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஊடுருவியுள்ளது.;
துபாய்,
கொரோனாவுக்கு பிறகு மீண்டும் உலக நாடுகளை குரங்கு காய்ச்சல் என்ற ஒரு வகை நோய் பயமுறுத்துகிறது. ஐரோப்பிய நாடுகளில் பலருக்கும் கண்டறியப்பட்ட இந்த நோய் பாதிப்பு, ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஊடுருவியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வந்த பெண் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குரங்கு காய்ச்சல் பாதித்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து பரிசோதனை நடத்தும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எனினும், ஐக்கிய அரபு அமீரகத்தில் எந்த இடத்தில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.