இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தினேன் - டொனால்டு டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அவர் கூறினார்;

Update:2025-12-23 09:55 IST

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தியதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறியதாவது, நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். கம்போடியா , தாய்லாந்து இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறேன். இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தினேன். நீங்கள் 1 கோடி பேரை காப்பாற்றியதாக பாகிஸ்தான் பிரதமர் என்னிடம் கூறினார். இந்தியா - பாகிஸ்தான் போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. உக்ரைன் - ரஷியா போரை மட்டுமே இதுவரை என்னால் நிறுத்த முடியவில்லை

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்