மாற்றம்

இந்த உலகில் இருக்கும் எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டே ஆக வேண்டும். உடல் எடுத்துள்ள உயிர்கள் வி‌ஷயத்தில் குழந்தைப் பருவம் மாறி வாலிபப்

Update: 2017-01-17 00:30 GMT
ந்த உலகில் இருக்கும் எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டே ஆக வேண்டும். உடல் எடுத்துள்ள உயிர்கள் வி‌ஷயத்தில் குழந்தைப் பருவம் மாறி வாலிபப் பருவமும், வாலிபப் பருவம் மாறி வயோதிகமும் வரத்தான் செய்யும். ஓர் அலை போனதும் மற்றோர் அலை வருவதைப் போல, ஒரு நிலை கழிந்து மற்றொரு நிலை வருவதே இயல்பு. ஒவ்வொரு பொருளும் இந்த விதிக்கு உட்பட்டதே ஆகும்.

–ஸ்ரீராமர்.



மவுனம்

எண்ணங்கள் அற்ற நிலையைக் கண்டு மக்கள் ஏன் பயப்பட வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. அதைத்தான் தினமும் தூக்கத்தில் அனுபவிக்கிறார்களே. தூக்கத்தில் மனமோ, எண்ணமோ இல்லை. இருப்பினும் தூங்கி விழித்தவுடன், ‘நான் நன்றாகத் தூங்கினேன்’ என்கிறோம். எந்த நிலையில் ‘நான்’ என்ற எண்ணம் சிறிதுகூட எழவில்லையோ, அதையே மவுனம் என்கின்றனர் ஞானிகள்.

–ரமணர்.


மதம்

புலன்களுக்குஅடிமையாவதைத் தடுக்கும் ஆசை தோன்றும் போது தான், மனிதனின் இதயத்தில் மத உணர்வு உதயமாகிறது. ஆகவே மனிதன் புலன்களுக்கு அடிமையாகாமல் தடுப்பதும், அவன் தன் சுதந்திரத்தை வலியுறுத்த உதவி செய்வதும் தான் மதத்தின் முழு நோக்கம். நன்மை செய்வதும், நல்லவனாக இருப்பதும்தான் மதத்தின் முழுப் பரிமாணம்.

–விவேகானந்தர்.

மேலும் செய்திகள்