இன்றைய ராசிபலன்

சிம்ம ராசிகாரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. தம்பதியரிடையே அன்பு மேலோங்கும்.

Update: 2024-05-02 01:24 GMT

இன்றைய பஞ்சாங்கம் 

குரோதி வருடம் சித்திரை மாதம் 19-ம் தேதி வியாழக்கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 12.28 வரை திருவோணம், இரவு 11.03 வரை அவிட்டம் பின்பு சதயம்.

திதி: இன்று அதிகாலை 1.09 வரை அஷ்டமி, இரவு 10.57 வரை நவமி பின்பு தசமி

யோகம்: சித்த யோகம், மரண யோகம்

நல்ல நேரம் மாலை : 10.30 - 11.30

ராகு காலம் மாலை : 1.30 - 3.00

எமகண்டம் காலை: 6.00 - 7.30

குளிகை காலை: 9.00 - 10.30

கௌரி நல்ல நேரம்: காலை 12.30 - 1.30

கௌரி நல்ல நேரம்: மாலை 6.30 - 7.30

சூலம்: தெற்கு

சந்திராஷ்டமம்: மிருகசீரிடம், திருவாதிரை

மேஷம்

சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். பெரிய விசயங்கள் சட்டென்று முடியும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த ஒரு நற்செய்தி வரும். நினைத்த காரியம் வெற்றி பெறும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்

குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி தரும். உடல்நிலை நன்றாக இருக்கும். மார்கெட்டிங் பிரிவினர் அதிக ஆர்டர்கள் பெறுவர். கணினி துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மிதுனம்

மகிழ்ச்சி பொங்கும். அழகு நிலையங்கள் வருவாயை அதிகரிக்கும். பெண்கள் வீட்டுச்செலவினை சமாளிப்பர். கணவன், மனைவி ஒற்றுமையாக இருப்பர். வியாபாரம் செழிப்புறும். உடல் நலம் சிறக்கும். பிள்ளைகள் பெற்றோர்களின் ஆதரவுடன் முன்னேறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கடகம்

கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். அரைகுறையாக நின்ற விஷயங்கள் உடனே முடியும். தாய்வழி உறவினர்களிடம் மதிப்பு, மரியாதைக் கூடும். உடல்நிலையில் சிறுபாதிப்பு ஏற்பட்டு விலகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

சிம்மம்

வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறைத் தேவை. தம்பதியரிடையே அன்பு மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி

வாராப் பணம் வரும். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். தந்தைவழி சொத்து கைக்கு வரும். கல்யாணம், கிரகப் பிரவேசத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

துலாம்

பிள்ளைகள் தங்கள் சந்தேகங்களை பெற்றோரிடம் போக்கிக் கொள்வர். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து கொண்டு அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பொதுநலத் தொண்டாளர்களுக்கு பெரிய பதவிகள் தேடி வரும். கை, கால் வலி வந்துப் போகும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

மகரம்

சுப காரியம் கைகூடும். நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கும்பம்

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பார்கள். மாணவர்கள் காதலில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்து கொள்வது நல்லது. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். திடீர் பயணங்கள் வந்துப் போகும்.ஒரு சிலர் நவீன வாகனம் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை

மீனம்

குடும்பத்துடன் வெளிநாடு சுற்றிப் பார்க்க திட்டமிடுவர். வீடு கட்ட கடன் வசதி கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெற்று தாய்நாடு திரும்புவர். விற்பனையாளர்கள் சாதுர்யமாகப் பேசி விற்பனையைக் கூட்டுவர். காதல் கசக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

 

Tags:    

மேலும் செய்திகள்