ஆன்மிகத் துளிகள்

எவன் ஒருவன் இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, ஒரு முறை துர்க்கையின் நாமத்தைச் சொல்லி வீட்டை விட்டு புறப்படுகிறானோ, அவனுடன் சூலம் ஏந்திய கையுடன் சிவபெருமானும் செல்வார்.

Update: 2017-04-11 01:15 GMT
துணை

எவன் ஒருவன் இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, ஒரு முறை துர்க்கையின் நாமத்தைச் சொல்லி வீட்டை விட்டு புறப்படு கிறானோ, அவனுடன் சூலம் ஏந்திய கையுடன் சிவபெருமானும் செல்வார். எனவே அவன் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நம்பிக்கை இருந்தால் எதையும் பெற முடியும்.

–ராமகிருஷ்ணர்.


விதிப்பயன்

படைப்பவரின் விதிப்படி கர்மத்தின் விளைவு செல்கிறது. அதனால் கர்மம் மிகவும் உயர்ந்ததா? என்றால், இல்லை. அது வெறும் ஜடமே. படைப்பவர்தான் எல்லா இடங்களிலும் இருந்து கொண்டு, அவரவர் வினைப்படி வாழ்க்கையை அமைக்கிறார். விதிக்காதது என்ன முயற்சித்தாலும் நடக்காது. அது நிச்சயம்.

–ரமணர்.


அச்சம்

இவ்வுலகிலோ அல்லது மறு உலகிலோ, இழிவுக்கும் பாவத்திற்கும் உறுதியான காரணம் அச்சமே. அதுதான் துயரத்தைத் தருவது, மரணத்தைத் தருவது, கேட்டை விளைவிப்பது. அந்த அச்சத்தை உண்டுபண்ணுவது எது? நமது உண்மை இயல்பை அறியாமையே. நாம் ஒவ்வொருவரும் மன்னருக்கெல்லாம் மன்னரான இறைவனின் வாரிசுகள்.

–விவேகானந்தர்.

மேலும் செய்திகள்