ஆன்மிகம்
இந்த வார விசே‌ஷங்கள் : 26–9–2017 முதல் 2–10–2017 வரை

திருப்பதி திருவேங்கடமுடையான் காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபாள வாகனத்திலும் பவனி.
26–ந் தேதி (செவ்வாய்)

 சஷ்டி விரதம்.

 திருப்பதி திருவேங்கடமுடையான் காலை கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபாள வாகனத்திலும் பவனி.

 மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை கஜேந்திர மோட்சம், மாலை கருட வாகனத்தில் திருவீதி உலா.

  உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

  சமநோக்கு நாள்.

27–ந் தேதி (புதன்)

  திருப்பதி வேங்கடேசப் பெருமாள் இரவு மகர கண்டியில் லட்சுமிகார ஆபரணங்களுடன் கருடோற்சவம்.

  மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காளிங்க நர்த்தனம், மாலை சே‌ஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா.

  மதுரை மீனாட்சி நவராத்திரி கொலு மண்டபத்தில் அலங்கார காட்சி.

  கன்னியாகுமரி பகவதி அம்மன் பவனி வருதல்.

  சமநோக்கு நாள்.

28–ந் தேதி (வியாழன்)

  துர்காஷ்டமி.

  திருப்பதி திருவேங்கடமுடையான் காலை அனுமன் வாகனத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலா.

  மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை ராஜாங்க அலங்காரம், மாலை மோகன அவதார காட்சி.

  உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

  கீழ்நோக்கு நாள்.

29–ந் தேதி (வெள்ளி)

  சரஸ்வதி பூஜை.

 திருப்பதி ஏழுமலையப்பன் காலை சூரிய பிரபையிலும், இரவு புஷ்ப விமானத்திலும் பவனி.

 கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கண்ணாடி சப்பரத்தில் பவனி.

 தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அம்மன் வீதி உலா.

 கீழ்நோக்கு நாள்.

30–ந் தேதி (சனி)

 விஜயதசமி.

 குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா பெருவிழா.

 ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி.

 ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலையில் சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.

 கன்னியாகுமரி பகவதி அம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளிய காட்சி.

 மேல்நோக்கு நாள்.

1–ந் தேதி (ஞாயிறு)

 முகரம் பண்டிகை.

 முகூர்த்த நாள்.

 சர்வ ஏகாதசி.

 சகல விஷ்ணு ஆலயங்களிலும் பெருமாள் கருட சேவை.

 மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் ஆகிய கோவில்களில் ரத உற்சவம்.

 குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் பாலாபிஷேகம்.

 மேல்நோக்கு நாள்.

2–ந் தேதி (திங்கள்)

 காந்தி ஜெயந்தி.

 கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

 சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

 மேல்நோக்கு நாள்.