லட்சுமண தீர்த்த நதி

குடகு மாவட்டம் மடிகேரியில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பிரம்மகிரி மலை. இதன் நடுவே அமைந்திருக்கிறது இருப்பு நீர் வீழ்ச்சி.

Update: 2018-07-18 10:42 GMT
பசுமை படர்ந்த மலைகளின் நடுவே உள்ள இந்த நீர் வீழ்ச்சியில் சுமார் 170 அடி உயரத்தில் இருந்து தண்ணீர், வெள்ளியை உருக்கி விட்டது போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஓங்கி உயர்ந்த மரங்கள், அடர்ந்த காபி தோட்டம், மரங்களில் படர்ந்து கிடக்கும் மிளகு கொடி சூழ இருக்கும் இந்த அருவியின் அழகு நமது கண்களை பிரமிக்க வைக்கின்றன.

இங்குள்ள மக்களால் இருப்பு நீர் வீழ்ச்சி, ‘லட்சுமண தீர்த்த நதி’ எனவும் அழைக்கப்படுகிறது. புராணப்படி சீதையை தேடி செல்லும் போது ராமருக்கு தாகம் ஏற்பட்டது. உடனே அவரது சகோதரர் லட்சுமணன் பிரம்மகிரி குன்றுகளில் ஒரு அம்பை எய்ததால் இந்த நீர்வீழ்ச்சி உருவானதாக வரலாறு கூறுகிறது.

இந்த நதியின் கரையில் ராமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தை பிரம்மசாரிகள் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது. மலை ஏற்றம் வீரர்களுக்கு பிரம்மகிரி மலை ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. ஆனால் இந்த மலையில் நடைபயணம் மேற்கொள்ள வனத்துறையின் அனுமதி வாங்கவேண்டும். 

மேலும் செய்திகள்