வாரம் ஒரு திருமந்திரம்

திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

Update: 2022-04-13 01:08 GMT
திருமூலர் பெருமானால், தித்திக்கும் வார்த்தைகளுடன் எழுதப்பட்ட நூல்தான், திருமந்திரம். இதனை சைவ நெறிகளுக்கு ஈடாக வைத்து, அடியவர்கள் போற்றுகின்றனர். திருமுறைகளில் 10-ம் திருமுறையாக இது தொகுக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

அளந்தேன் அகலிடத்து அந்தமும் ஆதியும்

அளந்தேன் அகலிடத்து ஆதிப் பிரானை

அளந்தேன் அகலிடத்து ஆணொடு பெண்ணும்

அளந்தேன் அவனருள் ஆய்ந்து உணர்ந்தேனே.

விளக்கம்:-

இறையருளால் இந்த உலகம் உருவான விதத்தையும், ஊழிக் காலத்தில் அழிவை சந்தித்ததையும் அறிந்து உணர்ந்தேன். அதேபோல் ஒருவனே இறைவன், அவனே இந்த உலகத்தின் முதல்வன், அவரே சிவபிரான் என்றும் அறிந்தேன். ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரின் இயல்புகளையும் அறிந்து கொண்டேன். இவை எல்லாவற்றையும் உருவாக்கிய இறைவனின் அருளையும் ஆராய்ந்து உணர்ந்து கொண்டேன்.

மேலும் செய்திகள்