வெங்கடேச பெருமாள் கோவிலில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி
வெங்கடேச பெருமாள் கோவிலில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி;
திருக்காட்டுப்பள்ளி,
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள வரகூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று உறியடி விழா நடைபெற்றது. விழாவையொட்டி பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார். அப்போது திரளான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். தொடர்ந்து கோவில் முன்பு உறியடி நடந்தது. பின்னர் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திரளான இளைஞர்கள் கலந்துகொண்டு வழுக்கு மரம் ஏறினர். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.