கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்

பண்பொழி திருமலை கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்;

Update:2022-10-24 00:15 IST

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவிலில் சூரசம்ஹார திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை, யாகசாலை பூஜை நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சிறப்பு பூஜைகளும், வீதி உலாவும் நடைபெறும்.

29-ந் தேதி வண்டாடும் பொட்டலுக்கு திருமலை குமரன் எழுந்தருளும் வைபவமும், பெரும் திருப்பாவாடை வைபவமும் நடக்கிறது. 30-ந் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 31-ந் தேதி தேரோட்டமும், கும்பிடு கரண நேர்ச்சையும் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்